தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் கலைப்புலி தாணு. தன்னுடைய படங்களை பிரமாண்டமாக எடுப்பதிலும், அதை மிகவும் பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ் பெற்றவர். அதற்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம். இந்த படத்தின் புரோமோஷன் போஸ்டர்கள் வான் வரை உயர்ந்து பறந்தன. சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது. திரைப்பட தயாரிப்பிலும் தயாரிப்பாளர் சங்க பணிகளிலும் பல முன்னுதாரணமான விஷயங்களை செய்துள்ளார். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு கடந்த ஜீலை 3-ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமா ஃப்யூச்சர் என்ற வாட்ஸ்அப் குரூப்பில்,  தான் திருமலை என்பவரிடம் 50 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும் அதை ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்ததாகவும் தன் கையெழுத்திட்டதாக போலி ஆவணங்களை சமூகவலைதளத்தில் பரப்பி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

அந்த வாட்ஸ்அப் குரூப்பில், லிங்கா படப் பிரச்சினையில் தொடர்புடைய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் கார்த்தி ஆகியோர் அட்மின்களாக இருப்பதை குறிப்பிட்டுள்ள அவர்,  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரவுள்ள நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் போலி ஆவணங்களை பரப்பி வருவதாக அந்த இருவர் மீதும் புகார் தெரிவித்திருந்தார். மேலும் தனது பெயரில் ஆவணங்களை தயாரித்து வாட்ஸ் அப்பில் ஷேர் செய்து வரும் ராஜ்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.