தொழிலதிபர், நடிகர், மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறையிலும் சிறந்து விளங்குபவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகிறது. 

இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 10 பள்ளிகளை தேர்வு செய்து, உதவ உள்ளதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி விழாவில் அறிவித்தனர்.

மேலும் தற்போது, தேவி 2 , கோமாளி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, சேறு , ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். அதே போல் 
ஒன் டூ த்ரீ,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியா 2 . 0 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 2 . 0  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் குறித்து வெளியாகியுள்ள தகவலில், ஐசரி கணேஷ் திருமலை - திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் ஆதிகாரப்பூரவ அறிவிப்பை திருப்பதியிலுள்ள  திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.