நீரவ் மோடிய விடுங்க... நம்ம வேளச்சேரி எஸ்பிஐ வங்கியை ஏமாற்றிய பிரபல தயாரிப்பாளர் யார் தெரியுமா...

ஆட்டோ வாங்குவதாக கூறி,வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ 3.44 கோடியை  பெற்றுள்ளார் பட  தயாரிப்பாளர்.

அருவா சண்டை படத்தின் தயாரிப்பாளர் இசக்கிராஜா.இவர் பல போலி  ஆவணங்களை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த படத்தில் அவரே நடித்தும்,மாளவிகா மேனனும் நடித்து வருகின்றனர்.இசக்கி ராஜா,பலமுறை எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கி உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இசக்கிராஜா சமர்ப்பித்த  ஆவணங்களை சோதனை செய்து பார்த்து உள்ளனர்.பின்னர் அவை அனைத்தும் போலி ஆவணங்கள் என தெரிய  வந்துள்ளது.

இந்த போலி ஆவணங்கள் மூலம், முதலில் 9 பேருக்கு ரூ.19 லட்சமும், அதன் பிறகு 13 பேருக்கும் பணத்தை  பிரித்து  கொடுக்கப்பட்டு உள்ளது

13 போலி ஆவணங்கள் மூலம்,ரூ.3.44 கோடி பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, லோன் பெற  பரிந்துரை செய்த சித்ரா, சாப்ட்வேர் ஹேக் செய்து இசக்கி ராஜாவுக்கு தேவையான லோன் கிடைக்குமாறு செய்த விஷயம் தெரியவந்துய்ள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டு,சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

மேலும், இந்த  படத்திற்கு இடை கால  தடை விதிக்கப்பட்டு உள்ளது.