மெட்ராஸ், கதகளி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த கேத்ரின்  தெரசா, தற்போது தற்போது  ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும்,  சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கலகலப்பு 2 படத்திற்கு பிறகு தெலுங்கு பக்கம் பறந்த கேத்தரின் மீண்டும் சிம்பு படம் மூலம் திரும்பவும் வந்துள்ள அவர் 
அண்மையில் ஐதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் கேத்தரின் தெரசா புதிதாக வீடு வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.2½ கோடி என்கிறார்கள். ஒரு படத்துக்கு  லட்சங்களில் சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர பங்களா வீடு வாங்கியது  எப்படி என தெலுங்கு சினிமாவில் சர்ச்சை கிளம்பியுள்ளது.  

மேலும் இந்த வீடு வாங்குவதற்கான தொகையை ஒரு தயாரிப்பாளர் கொடுத்துள்ளாராம்.  இருவரையும் இணைத்தும் கிசுகிசு பரவிவருகிறது. விரைவில் கேத்தரின் தெரசா அவரது தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ரவுண்டடிக்கிறது.