தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை விஷால் கோஷ்டியினர் திறக்க அனுமதிக்காமல் அவர்களைப் போலீஸார் கைது செய்திருப்பதின் மூலம் நாளை ரிலீஸாகவுள்ள ஆறு படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று ‘சீதக்காதி’ படம் மட்டும் ரிலீஸாகிவிட்ட நிலையில் நாளை தனுஷின் மாரி2, அடங்கமறு, கே.ஜி.எஃப், கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் நாளை ரிலீஸாகவுள்ளன.

இப்படங்கள் கியூப்,யு.எஃப்.ஓ. உள்ளிட்ட ஃபார்மேட்களில் ரிலீசாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சர்டிபிகேட் உட்பட சில ஆவணங்களை அளிக்கவேண்டும். தற்போது தலைவர் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி படங்களில் ரிலீஸுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் போலீஸார் விஷால் குழுவினருக்கு எதிரான மன நிலையில் இருப்பதால் தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசால் எந்த நிமிடமும் முடக்கப்படலாம் என்று தகவல் பரவுகிறது.