விஷால் உடனே தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும். அதே சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னும் 4 மாதத்தில் முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் விஷால் எதிரணியினர் மனு அளித்தனர்.

பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 10 பேர், முதலமைச்சர் பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில்... தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி தொடங்கி விஷால் மீது உள்ள அத்தனை நிதி மோசடிகள் மீதும் விசாரணை நடத்தவேண்டும். அவர் எல்லா முடிவுகளையுமே தன்னிச்சையாக எடுப்பதால் உடனே பதவிலிருந்து விலக வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தலைவர் உள்பட அத்தனை பதவிகளும் ரத்து செய்யப்பட்டு இன்னும் நான்கே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையே பூட்டிக்கிடந்த தயாரிப்பாளர் சங்கம் விஷால் நிர்வாகிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.