Asianet News TamilAsianet News Tamil

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது!

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.
 
producer council donate 10 lakhs for corona relief fund
Author
Chennai, First Published Jun 9, 2021, 8:26 PM IST

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.

producer council donate 10 lakhs for corona relief fund

இதற்க்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.  மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மற்றும் ரோட்டரி கிளப், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பேடேரஷன் தலைவர் எஸ்.தாணு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரகார, கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், fefsi நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து பலர் இதில் கொண்டார்கள்.

producer council donate 10 lakhs for corona relief fund

இந்த நிகழ்ச்சியின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கான காசோலையை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்த்தவர்கள் வழங்கினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios