Rudhran movie release என்னது..ரிலீஸ் ஆவது தயாரிப்பாளருக்கே தெரியாதா?..OTTக்கு போகும் ராகவா லாரன்ஸ் ருத்ரன்?..
Rudhran movie release : ஏப்ரலில் ருத்ரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது..
பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்த பாடலுக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் ஆகியவை நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாக உள்ளதாக கடந்த ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த தகவலை பகிர்ந்துள்ள இயக்குநரும் தயாரிப்பாளருமான கதிரேசன்..னக்கே இந்த தகவல் தெரியாது என்று நகைச்சுவையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.