விஜய் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  தொகுப்பாளினி பிரியங்கா.  

விஜய் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. 

இவர் காமெடியாக பேசி, கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது பலரையும் கவர்ந்து விட்டது. டிடியை தொடர்ந்து இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றும் கூறலாம். கடந்த வருடம் சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவ்வப்போது, பாடல்களும் பாடி அசத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நடிகர் கெளதம் கார்த்தி, மஞ்சிமா மோகன் நடித்துள்ள தேவராட்டம் படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த, டிடி, சிவகார்த்திகேயன், ரம்யா, மகாபா, என பல தொகுப்பாளர்கள் நடிகர்களாக அறிமுகியுள்ள நிலையில் ... பிரியங்கா அவர்களை மிஞ்சுவது போல்... வெள்ளி திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.