Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்... முதல் ஆளாக பாராட்டிய நடிகை பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் வசித்து வந்தாலும், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஆக்கபூர்வமான விஷயங்களை உற்று நோக்கி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டதற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
priyanka chopra wish the ambulance driver
Author
Chennai, First Published Sep 6, 2020, 12:06 PM IST

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் வசித்து வந்தாலும், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஆக்கபூர்வமான விஷயங்களை உற்று நோக்கி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டதற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி.  கடந்த நான்கு வருடங்களாக சென்னையில் தங்கி பிரபல கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திடீர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தற்காலிகமாக அவருடைய டிரைவர் பணியை தொடர முடியாமல் போனது.

priyanka chopra wish the ambulance driver

மேலும் ஊரடங்கு காரணமாக தன்னுடைய  சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார். அதையடுத்து தற்போது அவருக்கு 108 அவரச ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் ஆபுலன்ஸ் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையும் வீரலட்சுமிக்கு கிடைத்துள்ளது.

priyanka chopra wish the ambulance driver

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வீரலட்சுமியை மனதார பாராட்டி போஸ்ட் ஒன்றையும் போட்டுள்ளார். டிப்ளமா படித்துள்ள வீரலட்சுமி கனரக வாகனங்களின் லைசென்ஸ் பெற்று தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சென்னையில் பணியமர்த்த பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios