பிரியங்கா சோப்ராவை பெரும் சிக்கலில் மாட்டிவிட்ட ஜோதிடர்...!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா விதிகளை மீறி கட்டிடத்தை  கட்டியுள்ளதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

பிரியங்கா சோப்ராவிற்கு மும்பையில் அந்தேரி பகுதியில் அவருக்கு சொந்தமான  வணிக வளாகம் உள்ளது. நிறைய கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த வணிக வளாகத்திலேயே அலுவலகம் வைத்து உள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அலுவலகத்தை பார்வையிட்ட ஜோதிடர் ஒருவர்,  அலுவலகத்தில் ஒரு சில மாற்றத்தை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். அவ்வாறு செய்தால் மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என தெரிவித்து உள்ளார்   ஜோதிடர். இவர் பேச்சை கேட்டுக்கொண்டு விதிகளை மீறி தன்னுடைய அலுவலகத்தில்  விரிவுப்படுத்தி கட்டி உள்ளார்.

இதனை அறிந்த பொதுமக்கள், நடிகை மீது புகார் தெரிவிக்கவே, மாநாகராட்சி  அதிகாரிகள் இதனை உறுதி செய்து அவருக்கு நோடீஸ் அனுப்பி வைத்து உள்ளனர்

இதற்கு பதில் அளிக்காததால், அவருக்கு அபராதம் விதித்து உள்ளனர். இதற்கும் பிரியங்கா சோப்ரா உடன் படாததால், கட்டுமானத்தை இடித்து தள்ளுவோம் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டு உள்ளதாம்.