திருமணமாகி நான்கு மாதங்களே முடிய உள்ள நிலையில் ’ஊரு கண்ணு உறவு கண்ணு மற்றும் உலகக் கண்ணெல்லாம் பட்ட’ பிரியங்கா சோப்ரா,நிக் ஜோனஸ் ஜோடி பிரியவிருப்பதாக பெரும் அதிர்ச்சியான தகவலை அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமான வயது வித்தியாசம் பலருக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியது. அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக தாங்கள் ஜாலி டூர் சென்ற அத்தனை புகைப்படங்களையும் இந்த ஜோடி ஒன்று விடாமல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தது.

இந்நிலையில் அவர்களுக்குத் திருமணம் முடிந்து 117 நாட்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து நோக்கி செல்ல இருப்பதாக ஓகே பத்திரிக்கை (OK! Magazine) ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஓகே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் எல்லா விஷயத்திலும் சண்டை வந்துள்ளது. வேலை, பார்ட்டிக்கு செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உள்பட பலவற்றில், இருவருக்கும் அடிக்கடி சண்டை என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும், பிரியங்காவை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படி கூறுவதாகவும், அடிக்கடி பிரியங்கா கோப்படுவதாகவும், அதனால், நிக் ஜோனாஸ்க்கு தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், பிரியங்கா சோப்ரா உடனான இந்த திருமண உறவை முடித்துக் கொள்ள நிக் ஜோனாஸின் குடும்பத்தினர் கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொண்டு திருமண வாழ்க்கையில், தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று நிக் ஜோனஸின் குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், பிரியங்காவோ தொடர்ந்து 21 வயது பெண்மணி போன்று நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து நோக்கி சென்றுள்ளனர் என்று அந்த ஓகே பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.