நடிகை பிரியங்கா சோப்ரா கொசுவலையில் தைத்தது போல் ஒரு உடையை அணிந்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். 

நடிகை பிரியங்கா சோப்ரா கொசுவலையில் தைத்தது போல் ஒரு உடையை அணிந்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

முன்பெல்லாம் திருமணம் ஆகி விட்டால் திரையுலகை விட்டு நடிகைகள் முழுமையாக விலகா விட்டாலும், சிறிது காலம் விலகி இருப்பார்கள். ஆனால் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இது ஒரு பக்கம் இருந்தாலும், திருமணத்திற்கு பின்பு தான் அதிக கவர்ச்சியுடன் உடைகள் அணிவதை நடிகைகள் வழக்கமாக கொண்டுள்ளனர் என நெட்டிசன்கள் சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

அவர்கள் சொல்வதை உண்மையாகும் விதமாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

View post on Instagram

இந்த புகைப்படத்தில், கருப்பு நிற கொசுவலை போல் மெட்டீரியலால் ஆன உடை அணிந்துள்ளார். ஆபாசமாக இருக்கும் இந்த உடையை பலர் கலாய்த்து, விமர்சித்தும் வருகிறார்கள்.