பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட், என அனைத்து சினிமா துறையிலும், நடித்து கலக்கி இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.  சமீபகாலமாக பாலிவுட்டிலிருந்து தாவி, ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கதை பிடித்தால் மட்டுமே பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

இந்நிலையில் 'ஜேம்ஸ்பாண்ட்' படங்களில் நடித்து பிரபலமான நடிகர் டேனியல் கிரேக், தற்போது தன்னுடைய 25 ஆவது படமாக 'நோ டைம் டுடே ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதற்குமேல் 'ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே 'ஜேம்ஸ்பாண்ட்'  படங்களில், நான்கு முறை தான் நடித்து விட்டதால்,  இதற்கு மேல் அந்த கதையில் ஒரு பெண்தான் நடிக்க வேண்டுமென கூறினார்.  இவரின் இந்த முடிவு 'ஜேம்ஸ்பாண்ட்' பட  ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இவருடைய பெருந்தன்மை அனைவரையும் வியக்க வைத்தது.

இந்நிலையில், அடுத்ததாக ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் நடிகை லக்ஷனா லின்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹாலிவுட் திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது.  இது ஒருபுறமிருக்க, தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா 'ஜேம்ஸ்பாண்ட்' வேடத்தில் நடிக்க தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், 'ஜேம்ஸ்பாண்ட்' படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க நீண்டகாலமாக தனக்கு ஆசை உண்டு. அதேபோல் அந்த வேடத்திற்கு தான் பொருத்தமாக இருப்பேன். எனவே, இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது தன்னுடைய அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

தான் அடிக்கவில்லை என்றாலும் இந்த வாய்ப்பு மற்றொரு நடிகைக்கு  கிடைத்தால் தனக்கு சந்தோஷமே என தெரிவித்துள்ளார். பொதுவாக இதுவரை, சாதித்த பெண்களின் வாழ்க்கையில் படத்தில் மட்டுமே நடிகைகள் நடிக்க தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஓர் ஆண் நடிகர் நடித்த வேடத்தில், ஏற்று நடிக்க வேண்டும் என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.