’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அதிரடி காட்சிகளை மேற்கொள்ளும் போது தான், இப்படி அடிபட்டதாக கூறப்படுகிறது. 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி மிரள வைக்கிறார். அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவிற்கான மவுசு நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, ரத்த காயத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அதிரடி காட்சிகளை மேற்கொள்ளும் போது தான், இப்படி அடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில ரசிகர்கள் இது? உண்மையா என்பது போல் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார்.

தனக்கு படப்பிடிப்பில் காயம் பட்டது உண்மைதான் என்றும், ஆனால் பலரும் நினைப்பது போல் புருவத்தில் காயம் ஏற்படவில்லை, கன்னத்தில் தான் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் ஆக்ஷன் காட்சியில் ஈடுபடும் போது, கவனமாக இருக்கும்படி பிரியங்கா சோப்ராவிடம் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.