priyanka about her father in law
தொகுப்பாளினி பிரியங்கா, மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், ஐபிஎல் யில் பந்து பொறுக்கி போடும் வேலையை தான் முதலில் செய்து வந்தார்.
பின் மீடியாவின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, ஒரு லோக்கல் சேனலில் அழகு குறிப்புகள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்படியே படி படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று பிரபல தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் அந்த தனியார் தொலைக்காட்சி நடத்திய, விருது வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை பெற்ற இவர். மேடையில் கண் கலங்கியபடி அவர் கடந்து வந்த பாதைகள் பற்றி கூறினார் .
அப்போது தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமானவர்களுக்கு அழுதபடி நன்றிகள் தெரிவித்தார். மேலும் நான் ஷூட்டிங் முடிந்து கால் வலியோடு சென்றால், என் மாமனார் என் கால்களுக்கு தைலம் தேய்த்து கால் அமுக்கி விடுவார் என அவருடைய நல்ல குணத்தை கூறினாலும். அவரை டேமேஜ் செய்தது போல் பலருக்கு தோன்றியது.
இவர் உணர்ச்சிவசத்தில் பேசி விட்டாலும், அவரை பலர் தொடர்பு கொண்டு இதையெல்லாம் ஏன் வெளியில் சொல்லி உன் மாமனாரை டேமேஜ் பண்ற என்பது போல் பிரியங்காவை திட்டினார்களாம்.
