ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு நிகராக பேசப்படுவார்கள். அந்த வகையில் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "ஆர்ஆர்ஆர்" படத்திற்கு இது வரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், தற்போது நடிகை பிரியாமணி ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர் நாயகியாகவா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும்.

2007ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.