'பருத்திவீரன்' நடிகை பிரியா மணி, தான் நடிக்காத படத்திற்க்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கு சினிமா சங்கத்தினரிடம் புகார் கொடுத்துள்ளார். சினிமாவில் நடிகைகள் நடித்து அதற்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என கூறி புகார் கொடுப்பது வழக்கம். ஆனால் இவர் ஏன்? நடிக்காதப் படத்திற்கு நஷ்டஈடு கேட்கிறார் என்று தானே யோசிக்கிறீர்கள்.

ஆங்குலிகா திரைப்படம்:

இவர் கடந்த 5 வருடத்திற்கு முன் ஆங்குலிகா என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டவர் பின் ஒரு சில காரணத்தால் இந்த படத்தில் இருந்து விலகினார்.

கதாநாயகி மாற்றம்:

தீபக் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்து வந்த இவருக்கு பதில் மற்றொரு நடிகையை கதாநாயகியை வைத்து அந்த படத்தை எடுத்து முடித்தனர் படக்குழுவினர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இதில் பிரியாமணி நடித்த காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனை பார்த்த பிரியாமணி பட விளம்பரத்திற்காக தன்னை பயன்படுத்தியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.