Priyadarshan is one of the most important personality in Malayalam cinema. From time to time the director is coming to Tamil.
மலையாள திரையுலகில் கவனிக்கத்தக்க ஆளுமைகளில் முக்கியமானவர் பிரியதர்ஷன். இயக்குநரான அவ்வப்போது தமிழுக்கு வந்து தடம் பதித்து செல்வார்.
அந்த வகையில் உதயநிதியை வைத்து ஒரு படம் செய்து கொண்டிருக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது.
இந்த படத்தில் கோலிவுட்டின் சமரசமில்லா இயக்குநர் மகேந்திரன் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் நாற்காலியிலிருந்து நீண்ட காலம் விலகி நின்ற மகேந்திரனை விஜய்யின் ‘தெறி’க்கு வில்லனாக கொண்டு வந்தார் இயக்குநர் அட்லீ.
அம்மாம் பெரிய சாஃப்ட் மனிதர் விஜய்யின் வில்லனா? என்று கோலிவுட்டே கிண்டலடித்தபோது அலட்டாத நடிப்பில் மனிதர் அசரடித்திருந்தார் அந்தப் படத்தில். தெறிக்கு பிறகு மகேந்திரனுக்கு கணிசமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் புன்னகையுடன் தவிர்த்தார். இந்நிலையில்தான் பிரியதர்ஷன் - உதயநிதி கூட்டணி அவரை இந்த ப்ராஜெட்டுக்குள் இழுத்தது.
நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரத்தில் வளர்ந்திருக்கும் இந்த படத்திற்கு பொருத்தமான தலைப்பை தேடி இயக்குநர் உள்ளிட்ட மொத்த குழுவும் மண்டை காய்ந்திருக்கிறார்கள். அப்போது மகேந்திரனின் கவனத்துக்கு இதை கொண்டு போக, அவரோ ‘நிமிர்’ என்று ஒரு டைட்டிலை சொல்லியிருக்கிறார்.
டபுள் ஓ.கே. ஆகிவிட்டது டைட்டில். கதைக்கு செம பொருத்தமாக இருக்கிறதென இந்த ஜானி இயக்குநரை கொண்டாடுகிறார்கள். அதிலும் ஸ்டாலினின் மகனான உதயநிதி, இந்த வயதிலும் மகேந்திரனின் ஷார்ப்னஸை பார்த்து செமத்தியாய் இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.
மகேந்திரனா கொக்கா! ரஜினியையே ‘நடிக்க’ வைத்த ஆளாச்சேய்யா!
