பிரபல தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி பின் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக மாறினார். இவர் நடித்த முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

திரைப்படம்:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரித்த 'மேயாத மான்' என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியானது, மெர்சல் சுனாமியில் சிக்கிய இந்த படம் ரசிகர்களின் ஆதரவோடு நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் மேயாத மான்:

இந்நிலையில், மேயாத மான் மெர்சல் படத்தின் ரிலீசின் போது வெளியானதால். விஜய் ரசிகர்கள் பலரால் கவனிக்கப்படாத படமாக மாறிவிட்டது. இதனால் இந்த படத்தை இந்த வாரம் வெள்ளிக்கிழமை மறு வெளியீடு செய்ய முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

தற்போது நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக புதிய படங்கள் ஏதும் ரீலீஸ் ஆகாத நிலையில், இந்தப்படம் மீண்டும் ரீலீஸ் செய்ய உள்ளதால் மீண்டும் பிரியா பவானி ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்கலாம்.