priya open talk with serial actors sucide
பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா. இவர் சமீப காலமாக சீரியலில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது அதிக அளவில் அரங்கேறி வரும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை குறித்து இவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் பொதுவாக சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் வேலை குறித்து அவர்களுடைய வீட்டில் மனம் திறந்து பேசுவது இல்லை என்றும், ஆனால் அப்படி இருக்காமல் அவர்கள் தங்களுடைய வேலை குறித்து வீட்டில், மறைக்காமல் கூறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்படி நடந்துக் கொண்டால் குடுபத்திற்குள் எந்த ஒரு பிரச்சனைகளுமே வராது. வேலை காரணமாக அவர்கள் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், நமக்கென்ற ஒரு மரியாதை கொடுத்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.
மேலும், சகிப்புத்தன்மை, பொறுமை இல்லாதவர்களே தற்கொலை முடிவை எடுக்கின்றனர், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எதிர்த்து போராட வேண்டும்.
அதே போல தங்களுக்கு எதாவது பிரச்சனைகள் இருந்தால், அது பற்றி குடும்பத்தினரிடமோ, அல்லது நண்பர்களிடமோ பேசி தெளிவான முடிவையே எடுக்க வேண்டும் என பிரியா கூறியுள்ளார்.
