Asianet News TamilAsianet News Tamil

பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வியா ? உருக்கமான பதிவால் உருகிய ரசிகர்கள் !

 சின்னத்திரை, திரைப்படம், வெப் சீரிஸ் என கலக்கி வரும் பிரியா பவானி சங்கர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

Priya Bhavani  shankar post shocked to Fans
Author
Chennai, First Published Aug 4, 2022, 11:39 AM IST

சீரியல் மூலம் இல்லத்தரிசிகளுக்கு அறிமுகமான பிரியா பவானி சங்கர்  திரைப்படங்களில் டாப் டென் நாயகர்களுக்கு ஜோடி போட்டு முன்னணி நாயகியாக தன் இடத்தைப் பிடித்து விட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் மூலம் தொகுப்பாளரான ப்ரியா பவானி, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் நாயகியானார். பின்னர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் நடித்த இவர் 2020ல் மாஃபியா  அத்தியாயம் மற்றும் டைம் என்ன பாஸ் என்னும் வெப் தொடரிலும் தோன்றியிருந்தார். ஜீவா மற்றும் அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் ப்ரியா பவானி.

சமீபத்தில் வெளியான யானை படத்தில் அருண் விஜய்க்கு நாயகியான இவர் அதன் பின்னர் கிளாமர் உடை அணிந்து போட்டோ ஷூட்கள் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறார். தற்போது இவர் கைவசம் எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல் ஆகிய படங்கள் உள்ளன. அதோட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக பிரியா பவானி தோன்றுகிறார். மேலும் ஜெயம் ரவிக்கு நாயகியாக அகிலன், லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2  உள்ளிட்ட படங்த்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....Actor karthi : பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்த கார்த்தி.. விருமன் வெற்றி பெற மீனாட்சி தரிசனம்

சின்னத்திரை, திரைப்படம், வெப் சீரிஸ் என கலக்கி வரும் பிரியா பவானி சங்கர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அந்த பதிவில் தனது பழைய ஞாபகங்கள் குறித்தான காட்சிகளை தனது கைபேசியில் கண்ட பிறகு மனம் உடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரியா பவானி, '  நான் உணர்ச்சிவசப்பட்டு மிகவும் இருண்ட இடத்தில் இருந்தேன். அன்று காலை எழுந்த நான் எல்லாவற்றையும் விட்டு ஓட விரும்பினேன். அன்று மாலை எந்த திட்டமும் இல்லாமல் நாங்கள் விமானத்தில் ஏறினோம்.

திரும்பிப் பார்க்கும்போது ஒன்றுமில்லாமல் தவிப்பது போல் இருக்கிறது. 'என்னைக் கொன்றுவிடுவேன்' என்று நான் நினைத்தது, இல்லை. நான் உயிர் பிழைத்தேன். அது இனி ஒரு பொருட்டல்ல மற்றும் ஒரு நிலைக்கு இது உலகின் முடிவு என்று நான் எப்படி நினைத்தேன் என்பது வேடிக்கையானது.

மேலும் செய்திகளுக்கு...actress nadhiya : இன்னும் குறையாத அழகு...மேக்கப் போடாமல் நதியாவின் நியூ லுக் போட்டோஸ்..

எனவே நீங்கள் ஒரு கடினமான நேரத்தைச் சந்திக்கும் ஒருவராக இருந்தால், இது உங்களுக்கானது. அது சரி என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இது ஒரு கட்டம் மற்றும் நீங்கள் இதை கடந்து செல்வீர்கள். எதுவுமே முடிவல்ல. இன்னும் 3 வருடங்களில் உங்களுக்கு புதிய பிரச்சனைகள் வரும். உங்கள் பழைய பிரச்சனைகளைப் பார்த்து சிரிக்கும் வலிமையை வளர்த்துக் கொள்வீர்கள். அங்கேயே இருங்கள். அந்த புன்னகையை அணிந்து கொண்டு வாழுங்கள். ஏனெனில் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். திரும்பிப் பார்க்கும்போது நீங்கள் வருத்தப்படுவதைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் நீங்கள் அதை எப்படி வாழ்ந்தீர்கள். காலம் உங்கள் பிரச்சனைகளை மறக்க வைக்கிறது ஆனால் கடினமான காலங்களில் உங்களை தாங்கி பிடித்த நபரை நீங்கள் நினைவில் கொள்வீர்கள், நீங்கள் உண்ட உணவின் சுவைகள் மற்றும் நீங்கள் செய்த நினைவுகள், கவலை மிகையாகிவிட்டது" என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டதா? என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்:  பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios