இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இப்படத்துக்காக தயாரிப்பாளர் தரப்பு முதலில் அணுகியபோது தான் மிகவும் பிசியாக இருப்பதாக ச் சொல்லி மறுத்த பிரியா ஹீரோ எஸ்.ஜே.சூர்யா அன்பாகக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடிக்கச் சம்மதித்தாராம்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. மே 17-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்றது.அப்படத்துக்குப் பின்னர் பிரியாவுக்கு பல வாய்ப்புகள் குவிந்தன. அவர் தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார் . அதனைத் தொடர்ந்து 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'மாஃபியா', 'கசடதபற' மற்றும் அஜய் ஞானமுத்து - விக்ரம் நடிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் பட்டியலில் தற்போது ராதா மோகன் - எஸ்.ஜே.சூர்யா படமும் இணைந்துள்ளது.

துவக்கத்தில் தனது பிசி கமிட்மெண்டுகளை இப்படத்தைத் தவிர்த்தாராம் பிரியா. பின்னர் இயக்குநர் ராதாமோகனை அழைத்துக்கொண்டு அவரது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற எஸ்.ஜே.சூர்யா முழுக்கதையையும் கேட்க வைத்து சம்மதிக்க வைத்தாராம். ‘மான்ஸ்டர்’படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க பயமாக இருந்தது என்று அப்பட ரிலீஸுக்கு முன்னர் பிரியா பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பட வெற்றிக்குப் பின் சூர்யாவுடன் தொடர்ச்சியான நட்பில் இருந்ததால் அவரது சொல்லைத் தட்டமுடியாமல் இப்படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.