priya bavani pair with vijaysethupathi

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இதுவரை கதாநாயகர்கள் மட்டும் தான் சாதித்து வந்தார்கள். ஆனால் தற்போது சீரியல் நாயகிகளும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டனர்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி. இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 'மேயாத மான்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் இவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஏற்கெனவே இயக்குனர் பாண்டிராஜா நடிகர் கார்த்தியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இவர், தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ஜுங்கா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் 'வனமகன்' படத்தில் நடித்த நடிகை சயிஷா கல்லீகலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.