சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொறுத்தவரை யார் அதிகம் டி.ஆர்.பியை பிடிக்கின்றனர் என்பது தான்,  அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி. இதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பி வீட்டில் இருக்கும் இல்லத்தரகள் மதனை கவர்கின்றனர். 

அதே போல் வாரத்தில் இரண்டு நாட்கள் புதிய படங்களை ஒளிபரப்பு செய்து, வீட்டில் இருக்கும் அனைவரையும் கவர்கின்றனர். 

அதிலும் குறிப்பாக, விசேஷ நாட்கள் என்றால், குழந்தைகள், பெரியவர்கள் , இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் விதமான படத்தை ஒளிபரப்பு செய்து, டி.ஆர்.பி யை எகிறவைக்க வேண்டும் என்பதே அவர்களின் டார்கெட். 

இந்நிலையில்,  வரவிருக்கும் தமிழ் புத்தாண்டை ஒட்டி, பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, 'பேட்ட' படத்தை ஒளிபரப்பாக்க உள்ளனர். 

இந்த படம் வெளியாகி, மூன்று மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது சின்னத்திரையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ளது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க மிஸ் செய்தவர்களுக்கு, வீட்டிலேயே ஜாலியாக பார்க்க இப்படி ஒரு வாய்ப்பு சில மாதங்களிலேயே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.