கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், எஸ்.பி.பியின் இன்றைய உடல் நிலை நிலவரம் குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமான நிலையில் இருந்து. இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகு வத்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக நேற்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ரு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழுவினர் எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி உடல் நிலை குறித்து வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பிக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை வழங்க படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக இரண்டாவது நாளாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது எஸ்.பி.பி மனதில் பாலை வார்த்துள்ளது.

விரைவில் எஸ்.பி.பி நலம் பெற்று அவருடைய குரல் உலகம் முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகர்களின் ஆவலாக உள்ளது.