நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை  தந்த திரைப்படம் கைதி.இந்த படம்  லோகேஷ் ஜகனகராஜ் இயக்கத்திலும்,எஸ்.ஆர் பிரபு தயாரிப்பிலும் வெளியானது.இப்படத்தை ஹிந்தியில் டப்பிங்க் செய்ய நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்தது.தற்போது ரிலைன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர் நிறுவனத்துடன் இணைந்து ஹிந்தி மொழியில் தயாராகிறது கைதி திரைப்படம்.

"ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழக மக்கள் பெரிய அளவிற்கு ஆதரவினை தந்திருக்கிறார்கள்.ரிலைன்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும்,ட்ரீம் வாரியர் பிக்சர் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை இந்தி மொழியில் டப்பிங் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்.தமிழில், கைதி பாகம் இரண்டு எடுக்கவும் முயற்ச்சி எடுத்து வருகிறோம்". என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு.

TBalamurukan