Asianet News TamilAsianet News Tamil

நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

பழம் பெரும், பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்து திலீப் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
 
Prime minister modi and Rahul gandhi share the condolence for dilip kumar
Author
Chennai, First Published Jul 7, 2021, 10:01 AM IST

பழம் பெரும், பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்து திலீப் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

98 வயதாகும் நடிகர் திலீப் குமார்... கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சினைகளாலும், மூச்சு திணறல் பிரச்சனையையும் எதிர்கொண்டு வந்தார். கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 30  ஆம் தேதி, மூச்சி திணறல் பிரச்சனை காரணமாக மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட இவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 7 :30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Prime minister modi and Rahul gandhi share the condolence for dilip kumar

பாலிவுட் திரையுலகின் சகாபாதம் என கூறும் அளவிற்கு, நடிப்பால் திறமையை வெளிப்படுத்தி, அதிக விருதுகளை பெற்ற பிரபலம் என பெயர் எடுத்தவர். 1994 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் (Flimfare Award) விருதுகளை அதிகமுறை வென்ற பெருமை இவருக்கே உண்டு.

Prime minister modi and Rahul gandhi share the condolence for dilip kumar

1944 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் 1998 ஆம் ஆண்டில் Qila  என்கிற படத்தில் நடித்தார். இதன் பின்னர் வயது முதிர்வு காரணமாக எந்த படத்திலும் நடிக்க வில்லை. இந்நிலையில் இவரது மறைவை ஒட்டி பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பாரத பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

Prime minister modi and Rahul gandhi share the condolence for dilip kumar

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... " திலீப் குமார் அவர்கள் திரையுலகின் மேதை என நினைவு கூறப்படுபவர். தனது இணையற்ற புத்திசாலித்தனத்தால், தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்த்தவர். இவரது மறைவு, மிகப்பெரிய இழப்பாகும். இவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் தன்னுடைய இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Prime minister modi and Rahul gandhi share the condolence for dilip kumar

திலீப் குமார் மறைவு குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது, "திலீப் குமார் ஜி-யின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த அசாதாரண பங்களிப்பு அடுத்த தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும்." என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios