பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை 105 நாட்கள் வரை நடைபெறுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளதால், அவர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்காமல், அவர்களின் உள்ளே புதைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இந்த வாரம் இடம் பிடிக்க வேண்டும் என கூறியது பிக்பாஸ்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இன்று வெளியான முதல் புரோமோவில், சாக்ஷி, வனிதா ஆகியோர் உள்ளே வந்த காட்சிகள் காட்டப்பட்டது.

இன்றைய தினம் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட, முன்னாள் போட்டியாளர்கள் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிக்கையாளர்கள் உள்ள காட்சிகளும், அவர்கள் போட்டியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பும் காட்சிகளும் காட்டப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சாண்டியை பார்த்து பத்திரிகையாளர் ஒருவர் சேப் கேம் விளையாடுகிறீர்களோ... என தோன்றுகிறது என கேட்கிறார். இதற்கு சாண்டி, தன்னை பொறுத்தவரை ஜாலியாக இருக்க வேண்டும். வெளியில் என்ன செய்கிறேனோ அதே தான். அதை நீங்கள் ஸ்டேடர்ஜி என எடுத்துக்கொண்டால் எடுத்து கொள்ளுங்கள். நான் இப்படி தான் என அசால்டாக பதில் கொடுத்துள்ளார். 

மேலும் மற்ற பிரபலங்களை பார்த்து என்ன கேள்விகள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என இன்றைய நிகழ்ச்சி  பரபரப்பில் உச்சத்தை தொட்டுள்ளது.

அந்த புரோமோ இதோ...