உச்ச நடிகர்களுக்கு உடம்பெல்லாம் மச்சம் என்றால் பெரிய வீட்டு மருமகன் தனுஷூக்கு மச்சத்தில்தான்  உடம்பு போல! 

எப்டி எப்டி? என்கிறீர்களா! ஜஸ்ட் இப்டித்தான்...

சுமார் மூஞ்சி கொக்கி குமாரான அவர் ஹாலிவுட்டில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது அவரது மச்சத்தின் உச்சத்தை சொல்லும் விஷயம். 

இருந்தாலும் லோக்கலாய் இன்னொரு விஷயத்தை பார்க்கலமா. மலையாளத்தில் அதிரிபுதிரி ஹிட்டடித்த படம் ‘பிரேமம்’. இதன் நாயகிகள் மூன்று பேர். சாய்பல்லவி, அனுபமா மற்றும் மடோனா செபாஸ்டின். இந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு இவர்கள் மூவரின் மார்க்கெட்டும் செம கூலாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 

சரி இதில் தனுஷ்  சம்பந்தப்பட்டது எப்படி என்றால்...பிரேமம் நாயகிகள் மூன்று பேருடனும் ஜோடி போட்ட சிங்கிள் ஹீரோ நம்மாளுதான். 

அனுபமாவை கொடி படத்தில் ஜோடியாக்கினார், அடுத்து மடோனாவை பவர் பாண்டியில் ஜோடியாக்கினார். இப்போதோ மாரி 2வில் மலர் டீச்சர் சாய் பல்லவியை ஜோடியாக்கி இருக்கிறார். 

எவனுக்கு மச்சி கிடைக்கும் இந்த கொடுப்பினை? என்று கடுப்பாகிறது கோலிவுட்.
ஒல்லியா இருந்தாலும் எங்காளு கில்லிடா.