சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை பிரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்து இருந்தார்.
நடிகை பிரனீதா சுபாஷ் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பன்மொழி படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான இவர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாசிலாமணி மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற வணிகரீதியாக வெற்றி அடைந்த படங்களில் நடித்தார். பின்னர் 2012 விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பீமா தீரதள்ளி என்னும் கன்னட படத்திலும் நடித்திருந்தார்.

இவர் சைமா விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பரிந்துரை செய்யப்பட்டார். அவர் இறுதியாக 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' என்னும் படத்தில் நடித்திருந்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருந்த பிரனீதா சுபாஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான நித்தின் ராஜ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ரகசியமாக நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது கணவரின் 34வது பிறந்த நாளான கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அறிவித்தார். பின்னர் கடந்த வாரம் நீச்சல் குளத்தில் பிரனீதா சுபாஷ் கொடுத்திருந்த போஸ் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரனீதா சுபாஷ் டான்ஸ் ஆடும் வீடியோவை பதிந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோவா? என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரனீதா சுபாஷ் கர்ப்பம் ஆவதற்கு முன்பு தான் இப்படி ஆடியுள்ளார் என்பதை அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
