தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதுபோக திரைத்துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.
இந்நிலையில் நடிகர் பிரசாந்தும் தற்போது களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார் நடிகர் பிரசாந்த்.
மற்ற நடிகர்கள் செய்த உதவி உடனுக்குடன் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி விடும் நிலையில், பிரசாந்த் செய்து வரும் இந்த உதவி வெளியில் தெரியாமலே இருக்கிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2018, 11:54 AM IST