ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக டெல்லியில் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ்,  டெல்லி மாணவர்களின் வாய்ப்பை,  தமிழக மாணவர்கள் தட்டி பார்ப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ஒரு ஆடியோவில், 'டெல்லி பல்கலை கழகத்தில், தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடித்துவிடுவதால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு டெல்லி தமிழ் மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை ஆதரித்து உண்மை என்று கூறி பேசியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

இவரின் இந்த பேச்சுக்கு தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி டெல்லி தமிழ் மாணவர் சங்கத்தலைவரும் கன்னடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு தமிழன் இல்லை என்றும்,  ஒரு கன்னடர் என்றும் பேசியுள்ளார். இவருடைய பேச்சால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் ரசிகர்கள். இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் பிரகாஷ்ராஜ், கன்னடராக இருந்தாலும், அதிகம் நடித்து அவரை புகழ் பெறச் செய்தது  தமிழ் படங்கள்தான்.  சொந்தமாகவும் அவர் தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார். தமிழ்ப் படங்களால் பல கோடிகள் சம்பாதித்து, அதனை மறந்து அவர் பேசுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் இது குறித்து டெல்லி தமிழ் மாணவர் சங்க தலைவர் சரவணன் ராகுல் கூறுகையில், பிரகாஷ்ராஜ் ஒரு பிரபலமாக இருந்தும் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை,  பாகுபாடு இன்றி கல்வி கற்கும் மாணவர்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசாமல் இருப்பது உயர்ந்தது என கூறியுள்ளார்.   இவரின் கருத்துக்கு பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனத்தை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.