prakash raj talk about traffic ramasamy movie

க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்தப் படம் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர். 

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் இந்த படத்தில், முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார் என்பது 

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ் கூறும் போது " வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்." என்று குறிப்பிட்டார். 

மேலும் பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் " என்று இயக்குநர் விஜய் விக்ரம் கூறியுள்ளார் .