‘கில்லி’ முத்துப்பாண்டியின் காதல் தோல்வி... ஃபீல் பண்ணிய பிரகாஷ் ராஜ் - பதிலுக்கு திரிஷா தந்த கியூட் ரிப்ளை

கில்லி முத்துப்பாண்டியின் காதல் தோல்வி குறித்து நெட்டிசன் போட்ட வீடியோவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜும், நடிகை திரிஷாவும் டுவிட்டரில் ரிப்ளை செய்துள்ளனர்.

Prakash raj share Ghilli muthupandi love failure video actress trisha replies

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த படம் கில்லி. கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தனலட்சுமி என்கிற கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். அதேபோல் முத்துப் பாண்டி எனும் வில்லன் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் இதற்கான மவுசு மக்களிடையே குறையவில்லை.

தற்போது டிவி-யில் போட்டால் கூட டிஆர்பி எகிறும் அளவுக்கு இப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜின் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் திரிஷாவை பார்த்து சொல்லும் ‘ஹாய் செல்லம்’ என்கிற வசனம் மிகவும் பேமஸ் ஆனது. இப்படத்தில் திரிஷா மீதான முத்துப்பாண்டியின் காதல் தோல்வியில் முடிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... உதவி பெறுபவர்கள் தான் காலில் விழ வேண்டுமா? அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்

அதனை வைத்து மீம் கிரியேட்டர்கள் செய்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் தனுஷின் திருச்சிற்றம்பலம், படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவியின் புகைப்படத்தை பார்த்து ஃபீல் பண்ணும்படியான ஒரு சோகமான காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியை எடிட் செய்து அவர் திரிஷா போட்டோவை கையில் வைத்திருப்பது போல மாற்றி பின்னணியில் தேன்மொழி என்கிற காதல் தோல்வி பாடலை ஒலிக்கவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த நடிகர் பிரகாஷ் ராஜ் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த வீடியோவை யார் செய்திருந்தாலும் சரி.. நீங்கள் என் நாளை முழுமையாக்கிவிட்டீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி, செல்லம்ஸ் ஐ லவ் யூ என பதிவிட்டு திரிஷாவையும் டேக் செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த நடிகை திரிஷா, சிரிக்கும் எமோஜிகளுடன் பிரகாஷ் ராஜுக்கு கியூட்டாக ரிப்ளை செய்துள்ளார். திரிஷா - பிரகாஷ் ராஜ் இடையேயான இந்த உரையாடல் டுவிட்டரில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  பிரமாண்ட ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கிய வெற்றிமாறன்..ஜாக்கிஜான் ரேஞ்சுக்கு பறந்து பறந்து பட்டையை கிளப்பும் சூரி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios