* பணம் கொடுத்தவருக்கே ஓட்டு போடவேண்டும் என்று கட்டாயம் இல்லை. யாரும் தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தை தானமாக அளிக்கவில்லை. எவரால் வன்முறைகளும், மதவாதமும், ஊழல்களும் குறையலாம் என்று சிந்தித்துப் பார்த்து ஓட்டளிக்க வேண்டும்: இளவரசி மகள் கிருஷ்ணபிரியா. (இந்தப் புள்ளைக்குள்ளேயும் எம்பூட்டு புரட்சிகள் இருக்குதுன்னு பாரேன். அது சரிதாயீ, அம்மா ஆட்சியில இருந்தப்ப உன் பேச்சையே காணோமே ஒரு வேளை கோமாவுல இருந்தீகளா?)

* நாங்கள் ஆட்சிக்கு வந்து, தலைவர் ஸ்டாலின் முதல்வரானதும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். வெற்றி விழாவில் நான் கலந்து கொள்வேன்: உதயநிதி. (வெற்றி விழா!...ன்னா எப்படி தம்பி? படம் மொக்கை, வசூல் காலின்னு தெரிஞ்சாலும் கூட, தயாரிப்பாளர் தலையில மறுபடியும் துண்டை போட்டு, கேக் வாங்கி, படம் ரிலீஸான ரெண்டாவது நாளே கொண்டாடுவீங்களே அது மாதிரியா?)

* நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.விலிருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை!: அமைச்சர் சி.வி.சண்முகம். (அப்பா துணை முதல்வர் சொன்னதெல்லாம் உட்டாலக்கடியாண்ணே? முக்கிய கட்சிகள் கூட பேச்சுவார்த்தை நடக்குது, ரகசியம் பரம ரகசியம்!ன்னு பில்ட் அப் விட்டதெல்லாம் உள்ளார எப்போதும் உல்லாலா! உல்லாலாவாண்ணே!)

* பட வாய்ப்புகள் இல்லாததால் நான் அரசியலில் குதிக்கிறேன் என்கிறார்கள். அப்படியில்லை. இப்போதைக்கு வட வாய்ப்புகள் இல்லைதான். அடுத்த ஆறு மாசம் முழுவதும் என் கவனம் அரசியலில்தான் இருக்கும்!: பிரகாஷ் ராஜ். (யதார்த்த வாழ்க்கையில நீங்க  ஹீரோவோ, வில்லனோ, அரசியல்ல ஜெயிப்பீங்களோ இல்லையோ! ஆனா, இப்போதைக்கு பட வாய்ப்புகள் இல்லைன்னு பட்டுன்னு ஓப்பனா சொன்னீங்க பாருங்க. செல்லம்ம்ம் ஐ லவ் யூ !)

* உ.தனியரசு கூட ரெண்டுவாட்டி எம்.எல்.ஏ.வாகிட்டார். ஆனா தனக்கு அந்த கொடுப்பினை இல்லை, ஆக எப்படியாவது எம்.பி. ஆகிடணும்னு ஆசைப்படுறார் ஈஸ்வரன்: செய்தி. (ஏனுங்க தனியரசு ஃபுல்டை அரசியல் பார்த்தது போக, ஓவர் டைமும் அரசியல்தான் பார்க்கிறாரு. ஆனா நீங்களோ ‘நான் பார்ட் டைம் அரசியல்வாதின்’ன்னு பெருமையா பேட்டி கொடுத்த அளு. அப்புறம் எப்படி வெளங்கும்?)