தெலுங்கில் இன்று ரிலீசாகி உள்ள லவ் டுடே படம் பார்த்த ரசிகர் ஒருவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். இதுதவிர சத்யராஜ், யோகிபாபு, ராதிகா, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காதல் ஜோடி இருவர் தங்கள் போனை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்ட பின் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லியுள்ள இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி ரிலிசான இப்படம் வெற்றிகரமாக 3 வாரங்களைக் கடந்து ஓடி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Suriya Dance: நடிகர் சூர்யாவா இது? பிறந்தநாள் பார்ட்டியில் வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்..!

தமிழ்நாட்டில் மட்டும், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இப்படம் இன்று தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகி உள்ளது. விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜு தான் இப்படத்தை தெலுங்கில் வெளியிட்டுள்ளார். இப்படம் இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

Scroll to load tweet…

இந்நிலையில், தெலுங்கு ரசிகர்களிடமும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்று முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து படக்குழுவினரும் பார்த்தனர். அப்போது படம் முடிந்து வெளியே வந்த ரசிகர் ஒருவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் டைட்டில் கார்டில் நடிகர் விஜய்யின் பெயர் வரும்போது ரசிகர்கள் ஆர்பரித்து கத்தும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க தடையா..! வாரிசு நடிகையை துரத்தும் புது சர்ச்சை - பின்னணி என்ன?