நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு பரிமானகளில் தன்னை சினிமா துறையில் நிலை நிருத்திக்கொண்டுள்ள பிரபுதேவா மீண்டும் ஒரு காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை உறுதி படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்த பிறகு, நயன்தாராவை திருமணம் செய்ய தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திருமண முயற்சி கைவிடப்பட்டது. பின் பாலிவுட் படங்கள் இயக்குவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். 

இந்நிலையில் தற்போது சல்மான்கானை வைத்து 'தபாங் -3' இந்த படத்தை தயாரிக்கும் வேலையில் இருக்கிறார். மேலும் தமிழில் நான்கு திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார். விரைவில் இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'லட்சுமி' திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. 

தற்போது, பிரபுதேவா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான, சாயிஷாவுடன் அதிக அளவில் நெருக்கம் காட்டுவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

அவ்வப்போது தன்னுடைய நடன திறமைய சமூக வலைத்தளம் மூலம் வெளிக்காட்டி வரும் சயிஷா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவா நேரில் சென்று இவரை வாழ்த்தினார். பெரும்பாலும் நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவை சந்தித்து அவருடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இதுவே இவர்களின் காதல் கிசுகிசுவிற்கும் காரணமாக அமைத்துள்ளது என கூறப்படுகிறது.