இந்த வருட பொங்கல் பட ரிலீஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளது, நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்து வரும் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம்.

ஆக்ஷன் - திரில்லர் படமாக உருவாகி வரும், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, பார்பவர்களையே மிரள வைத்தது. அந்த அளவிற்கு மிகவும் ரஃப் அண்ட் டஃப் போலீசாக நடித்திருந்தார் பிரபுதேவா. இதற்கு முன் பிரபுதேவா நடிப்பில் வெளியான படங்களை விட,  'பொன் மாணிக்கவேல்' படத்தில் வித்தியாசமான பிரபுதேவாவை பார்க்க முடியும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படம் பிரபுதேவாவின் 50 ஆவது படமாக வெளியாக உள்ளது கூடுதல் தகவல்.

எனவே இந்த வருட பொங்கல் ரிலீசோடு, ஆஃப் செஞ்சுரி படங்களில் நடித்து முடித்த பெருமை பிரபுதேவாவிற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை, 'கண்டேன்' படத்தை இயக்கிய இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். நடிகை நிவேதா பெத்துராஜ், முரட்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவாவிற்கு கதாநாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை சபாக் நிறுவனம் தயாரித்துள்ளது.