நடிகர் மம்மூட்டி நடித்த 'அழகன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.

அந்த வகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு, இயக்குனர் சீமான் இயக்கிய 'பாஞ்சாலம் குறிச்சி' படத்தில், நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மதுபாலா. 

மேலும் தமிழ் மொழியை தவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால், தமிழில் அதிக அளவு கவனம் செலுத்தவில்லை. 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் இவர் மீண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். சமீபத்தில் 'அக்னி தேவி' என்கிற படத்தில் நடிப்பில் மிரட்டி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது  23 வருடத்திற்கு பின் மீண்டும் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

 

இந்த படத்தில் ராகுல் விஜய், பிரியா வத்லமணி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இயக்குனர் ஹரி சந்தோஷ் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் நாசர், மனோபாலா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.