மறைந்த முன்னால் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் விழா இன்று கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, திமுக தலைவர் கருணாநிதியிடன் ஏற்பட்ட திரையுலக பயணம், மற்றும் அதையும் தாண்டிய அவருடன் பழகிய நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். 

இந்நிலையில், நடிகர் பிரபு அவருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த, பெரியப்பா, மற்றும் மகன் என்கிற பந்தம் குறித்து பேசினார். 

கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் அமைந்த பல படங்களில் நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதன் மூலம் இவர்களுக்குள் இருந்த பல வருட நட்பின் வலிமையும் அதிகம். இதனை ஏற்கனவே பிரபு பல முறை கூறி இருந்தாலும். இன்று கலைஞரை சந்திக்க ஸ்கூல்லை கட் அடித்து விட்டு சென்றது போன்ற பல தகவல்களை மேடையில் கூறி கண் கலங்கினார்.

பிரபு தன்னுடைய பள்ளி படிப்பை பெங்களூரில் தான் படித்தார். அப்போது பிரபுவுக்கு தெரிந்தது எல்லாம் அப்பா சிவாஜி கணேசன் படங்களுக்கு பெரியப்பா தான் வசனம் எழுதுவார். அதனால் அவரை பார்க்க வேண்டும்  நினைத்தாராம். ஒரு முறை தன்னுடைய பள்ளிக்கு அருகே இருந்த பிரபல ஓட்டல் ஒன்றிக்கு கருணாநிதி வந்ததை அறிந்த பிரபு  உடனடியாக அவரை பார்க்க தன்னுடைய பள்ளியை கட் அடித்து விட்டு அங்கு சென்றாராம். 

அங்கு இருந்த அவரின் உதவியாளரிடம் தன்னுடைய பெரியப்பாவை பார்க்க வேண்டும் என கூறியபோது, அவர் பெரியப்பா தூங்குவதாக கூறினார். நான் இரண்டே நிமிடம் அவரை சந்தித்து விட்டு சென்று விடுவதாக கூறியபின் அவரது உதவியாளர், தன்னை பற்றி கூறியதும் பெரியப்பா உடனே கதவை திறந்து... வா பிரபு என தன்னுடைய கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார். 

பின் என்னப்பா... நீ இங்கே என கேட்டதும், தன்னுடைய பள்ளி பக்கத்தில் தான் இருப்பதாக கூறியுள்ளார் பிரபு. "அட ஆமாம் என் நண்பன் கணேசன் பிள்ளைகள் இங்கு தான் படிக்குறாங்க என கேள்வி பட்டேன் என தன்னுடைய நண்பனை விட்டு கொடுக்காமல் பேசினார் என்று கூறினார். சரி நீ ஸ்கூல் கட் அடிச்சிட்டு வந்தேன் என சொல்லுற சீக்குரம் கிளம்பு இப்படி எல்லாம் பண்ண கூடாது என கூறினார்.

உடனே நான் அங்கிருந்து கிளம்பும் போது, ஏன் அப்பாவுக்கு நீங்க வசனம் இப்போது எழுதுவது இல்லை என கேட்டேன் அதற்க்கு அவர் அதை உன் அப்பா கிட்டேயே சென்று இதை கேள் என மிகவும் குசும்பு தனமாக கூறினார்.  

கடைசியாக தன் கிளம்பும் போது ஒரு புத்தகத்தில் அவர் கை எழுத்து போட்டு என்னிடம் கொடுத்து புத்தகத்தின் மேலே உள்ளதை படிக்க சொனார். ஆனால் அப்போது எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்பது அவருக்கு தெரிய வந்தது. அதற்க்கு உங்க அப்பா பக்கம் பக்கமாக வசனம் பேசுவார் உனக்கு தெரியாதா என கிண்டல் செய்தார். 

சினிமா அறிமுகம்:

நான் சினிமாவில் அறிமுகமாக உள்ளேன் என்றதும், தந்தை சிவாஜி கணேசன் தன்னை அழைத்து முதலில் கோபால புறம் போய் பெரியவரை சந்தித்து, அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டு வா என்றார். 

இதனால் கலைஞர் அவரை சந்திக்க சென்றதும், அவர் தன்னை உள்ளே அழைத்து நீ நடிக்க உள்ளது தமிழ் படமா..? அல்லது இங்கிலீஷ் படமா..? என கேட்டு... தமிழ் படம் தான் என கூறியதும் மிகவும் சந்தோஷமாக ஆசீர்வாதம் வங்கி வந்தேன்.

மேலும் பல படங்களில் அப்பாவுடன் இணைந்து நடித்தேன். பாலைவன ரோஜாக்கள் படத்தின் மூலம், கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனக்கு வசனம் எழுத அவர் தன்னிடயம் முதலில் கேட்டது, உனக்கு தமிழில் வசனம் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா என்பது தான். 

பின் ஆற்காடு வீராசாமி இயக்கிய மேடை நாடகத்தில்... வசனத்தை எழுதி அவரே வாய்ஸ் கொடுத்து நடத்தினார். அதில் நான் நடித்தேன் அப்போது வசனத்தை தன்னிடம் கொடுத்து இதை உங்க அப்பாவிடம் பேசி கற்றுக்கொள் என கூறினார். அப்பாவும் இதை வாங்கி அதற்க்கு ஏற்றது போல் பேசினார் தனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

எப்போதுமே பெரியப்பா வசனம் எழுத, அதை அப்பா பேசினால் தான் நல்ல இருக்கும். என மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் கூறினார் பிரபு.

அதே போல் இவரை மட்டும் தான் எப்போது, வேண்டுமானாலும் போய் சந்தித்து பேசலாம். தன்னுடைய அப்பாவும் அவருடைய நண்பனுமான சிவாஜி கணேசன் அவர்களுக்கு சொன்ன இடத்தில் சிலை வைக்க இரவு பகலாக தவித்தார். சொன்னது போலவே அதே இடத்தில் வைத்தார். 

அந்த சிலை சிலரின் தூண்டுதல் காரணமாக, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் அங்கு இப்போதும் இருப்பது தன்னுடைய பெரியப்பா வைத்த சிலை. ஆனால் வரும் காலத்தில் அந்த சிலை எங்கு இருக்கும் என நீங்க தான் முடிவு செய்யவேண்டும் என ஸ்டாலினை பார்த்து கூறினார்.

மேலும் மிகவும் உணர்ச்சி வசமாக அழுதவாறு, தமிழ் இருக்கும் வரை, பெரியாப்பா பெயர் நிலைத்திருக்கும், அதே போல் அவருடைய நண்பன் என்னுடைய அப்பாவின் பெயரும் நிலைத்திருக்கும் என கூறி மேடையில் இருந்து விடைப்பெற்றார்.