Radhe shyam review : காலத்தைக் கணிப்பவனின் காதல் கதை ஒர்க் அவுட் ஆனதா? - ராதே ஷ்யாம் டுவிட்டர் விமர்சனம்

Radhe shyam review : ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.

prabhas starrer radhe shyam movie twitter review

ரொமாண்டிக் படம்

பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தை யு.வி.கிரிகேஷன்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நாயகன் பிரபாஸ் காலத்தைக் கணிப்பவனாக நடித்துள்ளார். அவரின் காதல் கதை தான் இப்படத்தின் மையக்கரு. முழுமுழுக்க ரொமாண்டிக் படமாக இது தயாராகி உள்ளது.

பிரம்மாண்ட வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக சாஹோ படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. அதன்பின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது ராதே ஷ்யாம் திரைப்படம்.

prabhas starrer radhe shyam movie twitter review

ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலே திரையரங்குகள் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் அப்படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

டுவிட்டர் விமர்சனம்

அதன்படி, ஏராளமானோர் பாசிடிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் பிரபாஸ் கிளாஸாக நடித்துள்ளதாகவும், அவருக்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரசிகர்கள், இப்படம் விஷுவல் ட்ரீட்டாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... Actress Yashika : போதும்டா சாமி... இனி கார், பைக் ஓட்டவே மாட்டேன் - நடிகை யாஷிகா அதிரடி முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios