Actress Yashika : போதும்டா சாமி... இனி கார், பைக் ஓட்டவே மாட்டேன் - நடிகை யாஷிகா அதிரடி முடிவு
Actress Yashika : இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய யாஷிகா, தான் இனி கார், பைக் ஓட்டப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
யாஷிகா கைவசம் உள்ள படங்கள்
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா. இவர் நடிப்பில் தற்போது கடமையை செய், சல்பர், பாம்பாட்டம், ராஜ பீமா, பெஸ்டி போன்ற படங்கள் உள்ளன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வந்த யாஷிகா, கடந்தாண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்து விபத்தில் சிக்கினார்.
விபத்தில் தோழி உயிரிழப்பு
இந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் படுகாயம் அடைந்த யாஷிகா, 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குணமடைந்தார். தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள யாஷிகா, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்களுடன் உரையாடல்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடிய யாஷிகா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சில ஏடாகூடமான கேள்விகளுக்கு ஸ்மார்ட்டாக பதிலளித்து அசத்தினார்.
கார், பைக் ஓட்ட மாட்டேன்
அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களிடம் இருந்த புல்லட் பைக் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யாஷிகா, “அந்த பைக் எனது வீட்டில் தான் இருக்கிறது. என்னுடைய அண்ணன் இப்போது அதை பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, அனைவரும் ஒரு முக்கியமான தகவல், இனி நான் காரோ அல்லது பைக்கோ ஓட்டப் போவது இல்லை என முடிவெடுத்து உள்ளேன்” என்று கூறினார்.
இதையடுத்து ரசிகர்கள் சிலர் ஏன்.. எதற்காக இந்த அதிர்ச்சி முடிவு என்று கேட்டதற்கு, “நான்தான் என் தோழியை கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன்” என்று நடிகை யாஷிகா ஆனந்த் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... ET movie : முருகன் பாடலால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு புது சிக்கல்... பாடலை தூக்கச் சொல்லி போலீஸில் புகார்