Asianet News TamilAsianet News Tamil

Adipurush release date : சிவராத்திரி ஸ்பெஷல் அப்டேட்.. ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
 

Prabhas starrer Adipurush movie release date announced
Author
Tamil Nadu, First Published Mar 1, 2022, 10:45 AM IST

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ் (Prabhas), பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Prabhas starrer Adipurush movie release date announced

பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' (Adipurush) படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார்.  ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சையது அலி கானும், சீதையாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாத காரணத்தால் ஆதிபுருஷ் (Adipurush) படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு ஆலோசித்து வந்தனர்.

Prabhas starrer Adipurush movie release date announced

இந்நிலையில், தற்போது ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவராத்திரி தினமான இன்று அந்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்... Visithiran movie : கவுத்திவிட்ட வர்மா.. மீண்டும் ரீமேக் படத்தை நம்பி களமிறங்கும் பாலா - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios