”விரைவில் திருமணம் செய்து கொள்வேன்”... ஆனால் அந்த ஹீரோயின் கிடையாது... மனம் திறந்த பாகுபலி...!

”பாகுபலி” படத்தில் நடித்து ஹிட் அடித்த ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் உள்ளதாக கடந்த சில வருடங்களாகவே தகவல் பரவி வந்தது. டோலிவுட் வட்டாரத்தை தாண்டி, ரசிகர்கள் மத்தியிலும் தீயாக சந்தேகம் பரவியது. இதற்கு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் அந்த வதந்தி பிரபாஸை விடுவதாக தெரியவில்லை.

இதனால் கடுப்பான பிரபாஸ் தன்னுடைய காதல் வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் வேலையில் இறங்கியுள்ளார். பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், எனக்கும் அனுஷ்காவிற்கும் இடையே இருப்பது 11 வருட நட்பு மட்டுமே, காதல் இல்லைன்னு திட்டவட்டமா மறுப்பு தெரிவிச்சிருக்காரு. அனைவரும் கூறுவது போல் எங்களுக்குள் காதல் இருந்தால், அதை ஏன் மறைக்க வேண்டும் என அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார் பிரபாஸ். 

அனுஷ்கா மிகவும் அழகானவர் என்பதால் தான் ’பாகுபலி’ படத்தில் நடித்தார். இரண்டு பேரில யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் நடந்தால் தான், வதந்திக்கு முடிவு வரும் போல தெரியுதுன்னு விளக்கம் கொடுத்திருக்கார். மேலும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தான், திருமண விவகாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபாஸ்.