எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வசூல் ரீதியாக இந்திய திரையுலகையே டோலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட திரைப்படம் இது. 

 

இதையும் படிங்க: “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

தற்போது இன்னும் பெயரிடப்படாத பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பே ரசிகர்கள் நெஞ்சைவிட்டு நீங்காத நிலையில், பிரபாஸின் 22வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று இரவு பிரபாஸ் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் உடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்ட பிரபாஸ், இன்று காலை 7 மணி 11 நிமிடத்திற்கு அசத்தல் அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தார். 

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

அதன் படி சரியாக சொன்ன நேரத்திற்கு பிரபாஸ் தனது 22வது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த படத்திற்கு ஆதிபுருஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. விசேசமாக வடிவமைக்கப்பட்ட இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என பிரபாஸ் கூறியுள்ளதன் மூலம் பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டமாக ஆதிபுருஷ் இருக்கும் என ரசிகர்கள் கற்பனை கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.