நடிகர் பிரபாஸ் 'பாகுபலி' படத்தின், மாபெரும் வெற்றிக்கு பின் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பிரமோஷன் பணிக்காக ஓயாமல் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.

மேலும் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும்,  தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், இவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளில், மிகவும் பிரபலமான அனுஷ்கா மற்றும் காஜல் அகர்வால் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இவர்கள் இருவரிடமும் பிடித்த விஷயம் மற்றும் பிடிக்காத விஷயங்களை பற்றி சொல்லுமாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த பிரபாஸ்,  நடிகை காஜல் அகர்வாலிடம் அவரின் அழகு மற்றும் எனர்ஜி மிகவும் பிடித்த விஷயம் என்றும், அவர் ஆரம்ப  காலகட்டத்தில் ட்ரெஸ்ஸிங் சென்ஸில் ரொம்ப வீக். ஆனால் தற்போது மாறி விட்டார் என கூறினார்.

இதைத்தொடர்ந்து நடிகை அனுஷ்கா பற்றி கூறுகையில், அனுஷ்காவின் உயரம் மற்றும் அழகு தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும், அதே போல் அவரிடம் பிடிக்காதது என்றால் போன் செய்தால் மட்டும் எடுக்கவே மாட்டார். அது மட்டும் தனக்கு பிடிக்கவே பிடிக்காது  என கூறியுள்ளார் பிரபாஸ்.