prabas issue
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு, உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராகிவிட்டார். பாகுபலிக்காக ஐந்து வருடம் தன்னை வருத்திக்கொண்டவர் தற்போது, அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்த அனைத்து மொழிகளிலும், தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் ஈட்டி கொடுத்துள்ளதால் தங்களுடைய சந்தோஷத்தை சக்ஸஸ் மீட் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, பிரபாஸை பலர் அழைத்தும் அவர் வர மறுப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லண்டனில் நடைபெற்ற சிறப்பு காட்சிக்காக அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அனுஷ்கா, தயாரிப்பாளர், இயக்குனர் ராஜமௌலி , தமன்னா போன்றோர் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது பாகுபலி 2 படத்தின், இந்தி உரிமையை பெற்ற இயக்குனர் கரண் ஜோஹர் சக்ஸஸ் மீட் நடத்த ஏற்பாடு செய்து, இந்த விழாவிற்கு அனைத்து கலைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது, என பிரபாஸ் சில காரணங்கள் கூறியும் தனக்காக விழாவை தள்ளி வைக்க வேண்டாம் நீங்கள் நடத்துங்கள் என கூறியுள்ளார்.
இதனால் பலர் பிரபாஸ் பாகுபலி வெற்றி, பிரபாஸை திமிராக நடந்து கொள்ள வைக்கிறது என கூறி வருகின்றனர்.
