‘செவப்பா இருக்கவன் பொய்சொல்லமாட்டான்’ என்பது நம்ம பவர்ஸ்டாருக்கு மட்டும் ஒரு சதவிகிதம் கூட பொருந்தாது. பொய், மேலும் பொய்,பித்தலாட்டம், பிரச்சினை அதிகமாகும்போது பொண்டாட்டியைக் கூட எதிராளிகளிடம் அடமானம் வைத்துவிட்டு எஸ்கேப் ஆவது என்று நாளுக்கு நாள் சீனிவாசனின் க்ரைம்ரேட் அதிகமாகிக்கொண்டே போகிறது.

வெளியே காமெடியன் போல் நடமாடும் ‘உயர்திரு420’ பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு உள்ளே கட்டிங், சீட்டிங் போன்று பல ரூபங்கள் உள்ளன. ஃபைனான்ஸ் வாங்கித்தருவதாக பீலா விட்ட  இவரை நம்பி பலர் ஒரு கோடி ரூபாய் வரை கூட கமிசன் கொடுத்தனர். ஆனால் சொல்லியபடி பவர் ஸ்டார் கடன் வாங்கி கொடுக்காத காரணத்தினால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவானது. இந்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறை வரை சென்று திரும்பினார் பவர் ஸ்டார் சீனிவாசன்.   இன்றுவரை சீனிவாசன் பெற்ற பல்வேறு கமிசன் தொகைகள் இன்னும் செட்டில் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஆலன் என்ற தொழில் அதிபருக்கு பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 90 லட்சம் ரூபாய் பெற்ற பவர் ஸ்டார் அதன் பிறகு தொழில் அதிபரை கண்டுகொள்ளவில்லை. இதனால் புதிய பட வாய்ப்பு தருவதாக பெண் ஒருவர் மூலம் ஏமாற்றி பவர் ஸ்டாரை கோயம்பேடு வரவழைத்த ஆலன் அங்கிருந்து அவரை உதகைக்கு கடத்திச் சென்றார். மேலும உதகையில் பவர் ஸ்டார் பெயரில் உள்ள சொத்தை தனக்கு எழுதித்தருமாறு ஆலன் மிரட்டியுள்ளார்.

அடி வாங்கி வீங்கிப்போன பவர், சொத்து தன்பெயரில் இல்லை மனைவி பெயரில் இருக்கிறது என்று கூறவே, மனைவியும் உதகைக்கு வரவழைக்கப்பட்டார். உதகை வந்த பவர் ஸ்டாரின் மனைவி ’சொத்து என்பேர்லதான் இருக்கு ஆனா டாகுமெண்ட் சென்னையில இருக்கு’ என்று கூற, சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது போல், ‘நான் சென்னை போய் டாகுமெண்டை எடுத்துட்டு வரேன். அதுவரை என் மனைவியை அடமானமா வச்சிக்குங்க’ என்று தன்மானத்தை விட்டு சென்னைக்கு தப்பி ஓடி வந்திருக்கிறார்.

அப்படி தப்பி வந்த பவர்தான் காவல்நிலையம் போய் கதறி அழுது தன் மனவியை மீட்டு வந்திருக்கிறார். ஆனால் இதுவரை நடந்த எதையுமே போலீஸார் நம்பவில்லை என்றும் பவர் ஸ்டாரின் பலவகையான நாடகங்களுல் இந்த கடத்தல் நாடகமும் இருக்கக்கூடும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.