power star rejected the chance to participate in bigboss 2
கடைசி நேரத்தில் விலகிய பவர் ஸ்டார்...! காரணம் இதுதானாம்...
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.. அதற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கி விட்டது..
இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் யாரெலாம் கலந்துக்கொள்ள போகிறார்கள் எப்படி எல்லாம் மாஸ் என்ட்ரி கொடுத்து உள்ளே வரப்போகிறார்கள் என்பதை பார்க்க தனி பட்டாளமே காத்திருக்கின்றது
இது ஒரு பக்கம் இருக்க, அப்படி யாரெல்லாம் கலந்துக் கொள்ள போகிறார்கள் என்ற கேள்விக்கு கடந்த சில நாட்களாகவே பவர் ஸ்டார் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி, மும்தாஜ் உட்பட15 நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது

ஆனால் கடைசி நேரத்தில் பவர் ஸ்டார் கலந்துக் கொள்ளவில்லையாம்.. ஏன் என்று கேட்டால் அதற்கு காரணம் சம்பள பிரச்சனை தான் என கிசுகிசுக்கப்படுகிறது..
பிரபலங்களை பொருத்து அவர்களுக்கான பேமென்ட் கொடுக்கப்படும் என பிக்பாஸ் டீம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.

போட்டியில் கலந்துக்கொள்வதற்கான சில அக்ரீமென்ட் முறையாக செய்த பின்னர் தான், போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்கள்...
ஆனால் இவர்களுக்குக்களாக பேசப்பட்ட தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக,சரியான பதில் கிடைக்காததால் தான் பவர்ஸ்டார் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்து உள்ளாராம்.
இந்த தகவல் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கிசுகிசுக்கப்பட்டு உள்ளது.
